இந்தியா போன்ற விவசாய நாட்டில் அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் வைக்கோலின் தேவை அதிகமாக உள்ளது.அளவுக்கு அதிகமாக வைக்கோலும் குறைவான எண்ணிக்கையில் கால்நடைகளும் உள்ள கனடா போன்ற நாட்டில் வைக்கோலைக் கொண்டு செங்கற்கள் தயாரிக்கப் படுகின்றன.வைக்கோல் கட்டுகளை பெரிய செங்கற்களின் வடிவில் உள்ள இயந்திரத்தில் மிகுந்த அழுத்தத்துடன் அழுத்தி வைக்கோல் செங்கற்கள் தயாரிக்கப் படுகின்றன.கனடாவில் உருவாக்கப்பட்ட இந்த வைக்கோல் வீடுகள் தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
0 comments :
Post a Comment