உடுமலை: வேளாண் துறை சார்பில்,துல்லிய பண்ணைய திட்டத்தில் நாற்றுக்கள் தயாரிக்க "நிழல் வலை" அமைத்து தரப்பட்டுள்ளது.வேளாண் துறை சார்பில் துல்லிய பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் ௨௦ விவசாயிகள் இணைந்து,அவர்கள் விரும்பும் இடத்தில ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் நிழல் வலை அமைத்து தரப்படுகிறது.இந்த பசுமை நிழல் குடை மூலம் ௨௦ ஹெக்டேர் நிலங்களுக்கு,நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் சமுதாய நாற்றாங்கால் அமைக்கப்படுகிறது.
பசுமை குடில்களில் ,தக்காளி,வெங்காயம்,மிளகாய்,காலிபிளவர்,பீட்ரூட் உட்பட காய்கறி பயிர் நாற்றுகளை,விவசாயிகளே உற்பத்தி செய்து ,தங்கள் வயல்களில் நடவு செய்து கொள்கின்றனர்.தரமான நாற்றுகளை,குறைந்த செலவில் தாங்களாகவே உற்பத்தி செய்து கொள்ளும் வசதி கிடைத்துள்ளது.அந்தந்த பகுதிகளிலேயே நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுவதால்,ஒரே மண் காரணமாக வேர் பிடுப்பு அதிகரிக்கிறது.பூஞ்சான் நோய் உட்பட பல்வேறு விதமான நோய் தாக்குதலும் தடுக்கப்படுகிறது.உடுமலை வட்டார வேளாண் அலுவலகம் சார்பில்,பார்த்தசாரதிபுரம்- எலையமுத்துர் மற்றும் தும்பல்பட்டி கிராமத்தில் துல்லிய பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு ,சமுதாய நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான காய்கறி பயிர்களின் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது
0 comments :
Post a Comment