வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக தண்டனை அளிக்ககுழந்தையின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கேள்விகளை புரிந்து கொண்டு பதில் அளிக்கக்கூடிய அறிவுத்திறன் இருக்கும் அளவிலான வயதுடைய குழந்தைகளின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், அசோக் குமார் கங்குலி ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொலை வழக்கு ஒன்றில் குழந்தை ஒன்று அளித்த சாட்சியம் மீது நம்பகத்தன்மை இருப்பதாக கூறி , குற்றவாளியை விடுதலை அளித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.
0 comments :
Post a Comment