தயிர் எனும் அருமருந்து....

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்
இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்
என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.




குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி 
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் LACTO இருக்கிறது.
தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும் 
whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை
நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.




பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை
சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல்
இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான
அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. 

தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம். 

4. ஷ்ரிகண்ட், சீஸ் போன்றவகளை பிள்ளைகளுக்கு
கொடுக்கலாம்.

நான் சிறுபிள்ளையாக இருந்த பொழுது வியாழன் தோறும்
உடையார்தாத்தா கொண்டு வரும் தயிருக்காக காத்திருப்பேன்.அம்மா வீட்டில் தயிர் செய்வார்கள். ஆனாலும் உடையார் தாத்தா கொண்டுவரும் தயிர் கத்தி போட்டு வெட்டுவது போல்
கெட்டியாகவும் மணமாகவும் இருக்கும்.

கொட்டாங்குச்சி கரண்டியால் தாத்தா நோகாமல் தயிர்
எடுத்து கொடுக்கும் அழகே அழகு.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes