ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னை சேர்ந்த உணவு கட்டுப்பாட்டு டாக்டர் லிசா சுதர்லாண்ட் குடி தண்ணீ ரின் சிறப்பு பற்றி கூறியிருப்பதாவது:-
தாகம் எடுத்தால் தான் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கின்றனர். அடிக்கடி தண்ணீர் அருந்துவது தான் உடலுக்கு நல்லது. உடலில் நீர்சத்து குறைவதால் தலைவலி ஏற்படுவது மட்டுமின்றி நமது கவனமும் சிதறும்.
குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வியர்வை துளி மூலமும் உப்புச்சத்தை இழக்கிறோம். இயல்பாக நமது உடலில் ஒரு நாளுக்கு 2-ல் இருந்து 3 லிட்டர் நீர்சத்து சுரக்க வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் திரவ உணவு மூலமே இதனை அடைய முடியும்.
இயல்பான தட்பவெப்ப நிலையில் தினமும் 2 லிட்டர் நீர் அருந்தினால் போதுமானது. கடும் வெப்பம் நிலவும் கோடை காலத்திலும், உடற்பயிற்சியின் போதும் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment