செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்

 உலகிலேயே முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரது இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பர்மிங்ஹாமிலுள்ள ஹவ்டன் என்பவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் ஒக்ஸ்போட்டிலுள்ள ஜோன் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு டொக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இதயம் இவருக்கு முதன்முறையாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 

அச்செயற்கை இதயத்துடன் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஹவ்டன். 

மேலும், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஹவ்டனால் தொடர்ந்து ஒரு மைல் தூரத்திற்கு அதிகமாக நடக்க முடிந்ததுடன் தனது அறக்கட்டளை நிறுவனத்தில் சுறுசுறுப்பாகப் பணியாற்றவும் முடிந்தது. 

அறக்கட்டளை சார்பில் 90 மைல் நடைப் பயணத்தில் பங்கேற்றதுடன் ஆல்ப்ஸ் மலையிலும் ஏறினார். இதய ஆராய்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இரு புத்தகங்களையும் எழுதியதுடன் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியும் திரட்டினார். 

செயற்கை இதயத்துக்கான மின்கலம் அதன் சேமிப்பு சக்தி குறையும் போதெல்லாம் மாற்றவேண்டி நேரிடும் அதன்போது மருத்துவமனையில் அவரிற்கு மாற்று மின்கலம் பொருத்தப்படும். 

கடந்த ஆண்டில் ஹவ்டனின் இதயம் 30 வீதம் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டதால் மின்கலம் மாற்றும் போதெல்லாம் அவர் இயல்பாகவே தனது வழமையான இதயத்துடிப்புடன் இருந்துள்ளார். 

செயற்கை இதயத்துடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த ஹவ்டனின் 68 ஆவது வயதில் அவரது உடல் உறுப்புகள் பல செயலிழக்கவே மரணமடைந்துவிட்டார். ஆனாலும் அவரது செயற்கை இதயம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றபடியால் மின்கலத்தை மருத்துவர்கள் நிறுத்தினால்தான் அவர் இறந்ததாக அறிவிக்க முடியும். 

ஹவ்டனின் மனைவி டியானோ, இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால் 11 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes