ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்

பூலோகம் வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் 108 வைணவ தலங்களுள் முதன்மையானது இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர் 
உலகத்தில் எந்த மூலையில் இருந்து திருவரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினால் போதும் இத்தலத்துக்கு நேரில் வந்து 
இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும் 

திருவரங்கத்தில் பாயும் காவிரி நதி பரமபதமான வைகுண்டத்திற்கு வெளியே ஓடும் 'விரஜா' நதிக்கு ஒப்பானது இங்குள்ள முலவர் 
-ரங்கநாதர் 'பெரிய பெருமாள் போன்ற திருநாமம் உடையவர் ' 
வலக்கை திருமுடியை தாங்க'' இடக்கை மலர் பாதத்தை சுட்டிகாட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கிய படி அருள்பாலிக்கிறார் 
மூலவர் ரங்கநாதனர் 
பங்குனிமாதம் ,வளர்பிறை சப்தமிதிதி சனிக்கிழமை அன்று சந்திரன் ரோகிணியிலும் குரு ரேவதியிலும் இருக்கும்போது திருவரங்கன் 
இங்கு வந்து சேர்ந்தார் 
ரங்க விமானத்தின் வெளியில் விக்னேஸ்வரர் இருந்து காவல் புரிகிறார் கீழப்பக்கத்தில் மகாவிஷ்ணுவின் யோக மாயையான 
துர்க்கை இருக்கிறாள் 

ரங்க நாதர் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டு காட்சி அளிக்கிறார் நூற்றுகணக்கான சந்நிதிகள் உள்ள இந்த ஆலயத்தில் 
கோதண்ட நாதர் பரமபதநாதர் பெரிய வீர ஆஞ்சிநேய சன்னதிகள் சிறப்பானவை. 

தாயார் சந்நிதிக்கு செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீ மன் நாரயணனே தன்வந்திரியாக 
காட்சி அளிக்கிறார். 

இங்குள்ள கருட பகவான் மிகப்பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார் . 

வைகுண்ட ஏகாதசிஅன்று மூலவர் தசாவதாரம் சித்தரிக்கபட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருகிறார் 


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes