பிரிட்டனைச் சேர்ந்த 38 வயது பெண்மணியான நீனா வேர் என்பவர் கடும்மாரடைப்பு ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு இரண்டு ஆரோக்கியமானகுழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.இந்த மருத்துவ அதிசயம் கேம்பிரிட்ஜில் உள்ள பாப்வொர்த் மருத்துவமனையில் நடந்துள்ளது.
நீனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பிழைக்க வாய்ப்பேயில்லை என்று தெரிவித்ததோடு, அவர் இருந்த அறைக்கு இறுதி ஆசீர்வாதம் அளிக்க பாதிரியார் ஒருவரையும் அனுப்பியது.
இவரது கணவர், மனைவிக்கு தனது கடைசி ஆறுதல்களை கூறி பிரியாவிடை கொடுத்தார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் இவற்றையெல்லாம் முறியடித்து, மருத்துவ அதிசயம் நிகழ்ந்தது.
சிசேரியன் அறுவை சிகிச்சையில் எவி, ஆல்ஃபி என்ற இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த நீனா வேர், அதன் பிறகு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சையையும் தாங்கி உயிர் பிழைத்து விட்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து கண் விழித்துப் பார்த்த நீனா வேர் தான் உயிருடன் இருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். இது எப்படி நடந்தது என்று அவர் செய்கை மூலம் மருத்துவமனை பணிப்பெண்ணிடம் வினவியதாகவும், ஆனால் பணிப்பெண்ணிற்கு அது புரியவில்லை என்றும் பிரிட்டன் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
அதன் பிறகு பேச முடிந்தவுடன் அவர், தனக்கு நிகழ்ந்த இந்த அதிசயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் "அறுவை சிகிச்சைக்கு முன் என் கணவர் ஆன்டியை என் அறைக்கு அனுப்பினர். நாங்கள் இருவரும் தனித்து விடப்பட்டோம், நான் இறக்கப் போகிறேன் என்பதை அறிந்திருந்த நான் அதனை அமைதியாக எதிர்கொள்ள விரும்பினேன்" என்று கூறியதாக பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இப்போது கூட தான் உயிருடன் இருக்கிறேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று கூறும் நீனா, நார்ஃபோல்க் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் பணி புரிந்து வந்தார்.
இரட்டைக் குழந்தை பிறந்த அதே தினத்தில் இவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment