சேலம்: முடியாது என்ற வார்த்தை முட்டாளுக்கு சொந்தம்.எனக்கு வாய்ப்பை அளித்து பாருங்கள்.எல்லாமும் முடியும் என்பதை காட்டுகிறேன்," என,தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சேலத்தில் பேசினார்.சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து,சேலம் சூரமங்கலம்,நான்கு ரோடு,அம்மாபேட்டை மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது :
ஜெயலலிதா,கருணாநிதி இருவரும் கூட்டணி அமைத்து நாட்டை கெடுத்து வருகின்றனர்.60௦ ஆண்டுகளாகியும் நாட்டில் இன்னும் வறுமை ஒழியவில்லை.நாற்றம் பிடித்த அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கினால் வறுமை ஒளிந்து விடுமா? சேலம் மாவட்டத்துக்கு வெறும் 512 படுக்கை கொண்ட மருத்துவமனை போதுமா? அதே போன்று சேலம் ரயில்வே கோட்டமும் இன்னும் அப்படியே தான் உள்ளது.இதன் வளர்ச்சிக்கு பாடுபடாமல்,லஞ்சம் வாங்குவதில் மட்டும் இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன.
சுடுகாடு வரை ஊழல் செய்த செல்வகணபதி.ஊழல் பணத்தில் பாதியை கருணாநிதியிடம் கொடுத்து விட்டு,கட்சியில் இணைந்துவிட்டால் புத்தர் ஆகி விடுவாரா?.விவசாயிகளுக்கு என தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் அனைத்தும் கட்சி பிரமுகர்களுக்கு மட்டுமே;உண்மையான விவசாயிகளுக்கு கடன் குட கிடைப்பதில்லை.இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மின்சாரம் இருக்காது.அதற்கு காரணம் இரண்டு கட்சியும் சரியான திட்டங்கள் தீட்டாதது தான்.
முடியாது என்ற வார்த்தை முட்டாளுக்கு சொந்தம்.எனக்கு வாய்ப்பை அளித்து பாருங்கள்,எல்லாமும் முடியும் என்பதை காட்டுகிறேன்.இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை வலியுறுத்துவதால் ,தன்னை எதிர்த்து போட்டியிடுபவர் வாபஸ் பெற வேண்டும் என திருமாவளவன் கூறுகிறார்.நான் இலங்கை பிரச்சனைக்காக தேர்தலையே புறக்கணிக்க வேண்டும் என்ற போது,யாரும் பேசவில்லை.தற்போது பதவி வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுகின்றனர்.
ஜெயலலிதா,கருணாநிதி இருவரும் தங்களது பாத்து தலைமுறைக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர்.தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.இதற்கு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போன் போட்டு தே.மு.தி.க.,வை ஆதரிக்க சொல்லுங்கள்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
0 comments :
Post a Comment