கம்ப்யூட்டர் பணியில் இருப்பவர்களுக்கு இடுப்பு, தோள் பிடிப்பு மற்றும் கைகளில் இறுக்கமும், பிடிப்பும் வருவது சகஜம் தான். காரணம், சரியான விதத்தில் உட்காராமல் இருப்பது, கைகளுக்கு அழுத்தம் தராமல் வேலை செய்யாமல் இருப்பது, தோள்பட்டையில் வலி ஏற்படும் வகையில் வேலை செய்வது ஆகியவை தான் காரணம். கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது, எந்த வித அழுத்தமும், உடலில் எந்த பாகத்துக்கும் தராமல் உட்கார வேண்டும்; வேலை செய்யும் போது, கைகளுக்கோ, இடுப்புக்கோ இறுக்கமோ, அழுத்தமோ இருக்கக்கூடாது. கைகளை , கம்ப்யூட்டர் கீபோர்டில் சமமாக படியும் படி வைத்து பணி செய்ய வேண்டும்; நெடுக்காக வைத்து செய்தால், உள்ளங்கையிலும் வலிக்கும். உடலில், முக்கியமாக கழுத்து வலி தான் கம்ப்யூட்டர் பணியில் அடிக்கடி ஏற்படும்.
ஆ... ஊ... அப்ப்ப்... ஸ்ஸ்ஸ்!
இருக்கையில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் மூழ்கி விடக்கூடாது; எந்த வித கழுத்து அழுத்தமும் இல்லாமல் ரிலாக்சாக கம்ப்யூட்டரில் பணி செய்ய வேண்டும். கழுத்தை குனிந்தோ, கம்ப்யூட்டருக்குள்ளேயே தலையை விட்டுக் கொள்வது போலவோ வேலை செய்யக்கூடாது என்பது டாக்டர்களின் ஆலோசனை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment