உலகம் முழுவதும் சுற்றுப்புற சீர்கேட்டால் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு பஞ்சம் பனி உருகுதல் கடல் நீரின் அளவு மிக வேகமாக அதிகரித்தல், பல புதிய நோய்கள், என்று அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
வெப்பமே பார்த்திராத நாடுகள் கூட தற்போது வெப்பத்தை பார்த்து பயந்து போய் உள்ளன. மின்சிறி என்ற ஒன்றை பயன்படுத்தி இருக்காத நாடுகள் எல்லாம் அதை பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டன.
இந்நிலைக்கு காரணம் காடுகள் அழிப்பு, எந்த காலத்திலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள் வெளியிடும் சுத்திகரிக்காத கழிவுகள், குண்டு பல்புகள், இவை தவிர பல காரணங்கள், இவை நம் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை.
நம்மால் முடிந்த அளவு இதற்க்கு துணை போகாமல் இருக்கலாம், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கலாம், குண்டு பல்பு அதிக வெப்பத்தை உண்டு பண்ணுகிறது அதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம், தங்களது வீடுகளில் முடிந்தவர்கள் மரம் வளர்க்கலாம், மின்சார பயன்பாடு இல்லாத போது அதை எரிய விட்டு கொண்டு இருப்பதை நிறுத்தலாம். இவை எல்லாம் நம்மால் முடிய கூடிய எளிதான உதவிகளே.
இன்று இரவு (8-8-08) 8 மணிக்கு இதை மக்களிடைய இதன் தாக்கத்தை உணர செய்ய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த எக்ஸ்னோரா அமைப்பு அனைவரையும் 8 நிமிடம் அனைத்து மின்சார விளக்குகளையும் அனைத்து இதற்க்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. (இதை பயன்படுத்தி எவனும் திருடிட்டு போகாம இருந்தா சரி)
நம் தமிழக அரசு பாதி நேரம் மின்சாரமே தருவதில்லை, இவர்கள் உலக மக்கள் மீது ரொம்ப அன்பு வைத்து ரொம்ப தீவிரமா கடை பிடிக்கறாங்க போல, சரி அதை விடுங்க. அது தான் அவர்களே பாதி நேரம் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்களே நாம் 8 நிமிடம் நிறுத்தி புதுசா என்ன செய்ய போகிறோம் என்று கேட்க வேண்டாம், இதனால் நாம் பெரிய உதவி செய்துவிட போவதில்லை, இது முக்கியமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ய சொல்கிறார்கள், மற்றபடி வேறு எந்த விசயமும் இல்லை. எனென்றால் பாதி பேருக்கு வருஷா வருஷம் வெய்யில் அதிகமாகிட்டே வருகிறதே அப்படிங்கற அளவுல தான் தெரியும் ஆனால் அது எதனால் அதிகம் ஆகிறது என்று தெரியாது. அதனால் விதண்டா வாதம் பேசாமல் உலக சுற்றுப்புற சூழலில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.
0 comments :
Post a Comment