நவீன 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி' சிகிச்சை!
மருத்துவத் துறையில், அறுவைச் சிகிச்சை முறை கண்டறியப்பட்டது ஓர் மிகப்பெரிய திருப்புமுனை எனலாம்.
அதிலும் குறிப்பாக, தற்போதைய நவீன 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி' அறுவைச் சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஓர் மாபெரும் புரட்சி என்றே கூறலாம்.
பொதுவாக ஓர் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் முன்னர், அந்த நோயைப் பற்றியும், அந்நோய் ஏற்பட்டதற்கான காரணம் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
உதாரணமாக, நமது உணவு மண்டலத்தில் ஓர் கோளாறு ஏற்பட்டால், ஸ்டீல் குழாய் வழியாக உபகரணங்களை அனுப்பி, பரிசோதித்து அதன் பின்னரே அறுவைச் சிகிச்சை செய்வர்
ஆனால், தற்போது ஒரு சிறிய மாத்திரை வடிவிலான கேமராவை உணவு மண்டலத்துக்குள் அனுப்பி நோயின் பாதிப்பை எளிதாக கண்டறிகின்றனர். அதன் பிறகு, நோய்க்கு சிகிச்சை அளிப்பதும் எளிதாகிவிடுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பே 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி' சிகிச்சை முறையாகும்.
இந்த காப்ஸ்யூல் வடிவ காமிரா 8 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் படங்களை எடுக்கும் திறன் கொண்டது. இதனால், சிகிச்சை அளிப்பதும் சுலபம். தற்போது, இந்த கருவியிலும் பல நவீன வசதிகள் புகுத்தப்பட்டு வருகின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment