ஈஸ்கோப் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜி.அருண் தயாரித்து இயக்கும் புதிய படம் "எதிர்மறை'. புதுமுகங்கள் அஜய், ராகேஷ், பானுஸ்ரீ, ஷிரீனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில், திரைப்பட ஒளிப்பதிவில் டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தியுள்ள ரெட் ஒன் கேமராவும் இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஃபேன்டம் கேமிராவும் ஒருசேர பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓர் இந்தியப் படத்துக்கு இந்த இரு கேமிராக்களையும் பயன்படுத்துவது இதுவே முதல்முறை.
இதுகுறித்து இயக்குநர் ஜி.அருணிடம் கேட்டபோது...
""இந்த இரு வகை கேமிராக்களை இந்தியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் கைவண்ணத்தில் பயன்படுத்தியுள்ளதைப் பெருமையாகக் கருதுகிறோம். ஒரு சி.பி.ஐ. அதிகாரியின் சொந்த வாழ்க்கை, அவர் விசாரிக்கும் தொடர் கொலை வழக்கு போன்றவற்றை உளவியலுடன் கலந்து சொல்லியிருக்கிறோம். முழு படமும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்கள் புதுமையை உணருவார்கள். பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் பிரமிப்பின் எல்லைக்குச் செல்வர். இந்தியத் திரைப்படங்களைத் தர ரீதியாகவும் தொழில்நுட்பரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படமாக அமையும்'' என்றார்.
பாடல்கள் -வைரமுத்து. இசை -முருகன்மோகன். ஒளிப்பதிவு -தினேஷ்குமார். கலை -ராஜீவன். படத்தொகுப்பு -வி.ஜே.சாபு-ரியாஸ்
0 comments :
Post a Comment