நடிகர் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிக்கும் 'எந்திரன்' படத்தின் பாடல் ஒன்றுக்கான நடன ஒத்திகைக் காட்சிகள் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விடியோ இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
4 நிமிடங்கள் ஓடும் அந்த விடியோ காட்சியில் நடனக் குழுவினருடன் ரஜினி-ஐஸ்வர்யா ராய் நடன ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது ஒளிபரப்பாகிறது.
மேலும், 'எந்திரன்' படத்தின் இரு பாடல்கள் ஏற்கெனவே அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
ஷங்கரின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் 'எந்திரன்' படத்தின் காட்சிகள் அனுமதியின்றி இணையதளத்தில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment