அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாண பல்கலைக் கழகத்தின் நரம்பியல் துறை உதவி பேராசிரியர் அமிரோஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
குளிர்பானத்தில் பயன்படுத்தப்படும் பிரக்டோஸ் சர்க்கரை கலந்த உணவு வகைகளை எலிகளுக்கு வழங்கினார். அந்த எலிகளை குளத்தில் நீந்த விட்டார். இடையில் ஓய்வு எடுக்க நடை மேடைகளை அமைத்து இருந்தார்.
2 நாள் கழித்து அந்த எலிகளை மீண்டும் குளத்தில் நீந்த வைத்தார். அப்போது நடை மேடைகள் அகற்றப்பட்டன. அவை இடையிடையே ஓய்வெடுக்க வைக்கப்பட்டிருந்த நடைமேடை குறித்து கவலைப்படாமல் எலிகள் நீந்தி கொண்டே இருந்தன.
இதன் மூலம் அவற்றின் திறன் குறையவில்லை. ஆனால், நடைமேடை எடுக்கப்பட்டது குறித்த ஞாபகசக்தி இல்லை என்பது தெளிவாகிறது. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், மற்றும் குளிர்பா னங்களை அதிக அளவில் குடித்தால் அதில் உள்ள பிரக்டோஸ் சர்க்கரை ஞாபக சக்தியை குறைத்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment