ஃபோர்டு இந்தியா நிறுவனம் "ஐகூல்' எனும் புதிய ரகக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்நிறுவன ஆலை சென்னையை அடுத்த மறைமலை நகரில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் "ஐகான்' மிகவும் பிரபலம். தற்போது "ஐகூல்' எனும் புதிய ரகக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 12-ம் தேதிமுதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களிடமும் இந்தகார் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் ஓடக்கூடிய ஐகூல் மாடல் கார் விலை ரூ. 4.82 லட்சமாகும். டீசலில் இயங்கும் ஐகூல் விலை ரூ. 5.42 லட்சமாகும்.
ஐகூல் டீசல் காரில் டியூராடார்க் டிடிசிஐ 1.4 டீசல் என்ஜினும், பெட்ரோல் காரில் ரோகாம் 1.3 பெட்ரோல் இன்ஜினும் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் அதிகம் சேமிக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment