முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் 4 நாள்களில் பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் கூறினார்.
பன்றிக் காய்ச்சல் குறித்த ஊடக பயிலரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் வி.கு.சுப்புராஜ் பேசியதாவது:
இதுவரை தமிழகத்துக்கு வந்த விமானப் பயணிகள் 8.20 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 17 பேருக்கு இந்நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 106 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேர் முழுமையாக குணமடைந்துவிட்டனர். மீதமுள்ள 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
51 பேரில் 35 பேர் சென்னையிலும், 16 பேர் கோவையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நோயை எவ்வாறு அடையாளம் காணலாம் என ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டிய அவசியமில்லை. மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றார் சுப்புராஜ்
0 comments :
Post a Comment