"களத்தூர் கண்ணம்மா'வில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி "உன்னைப்போல் ஒருவன்' வரை 50 ஆண்டுகளாக சினிமாவில் சாதித்து வரும் கமல்ஹாசனின் பொன்விழா ஆண்டைப் பாராட்டி பிரமாண்டமான விழா நடைபெறவுள்ளது.
கமல் ரசிகர்கள் நடத்தும் இந்த விழாவை ஒளிபரப்ப பிரபல டி.வி. சேனல்கள் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. விழா குறித்து கமல்ஹாசனிடம் கேட்டால்...
""என் ரசிகர்கள்தான் விழா எடுக்க ஆசைப்படுகிறார்கள். நான் அதைத் தடுக்க முயற்சித்தாலும் அவர்களது அன்பு அதை முறியடித்துவிடும் என்றே எண்ணுகிறேன். ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பதை நான் சாதனையாகக் கருதவில்லை.
இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நான் தாக்குப்பிடித்துக்கொண்டிருப்பதற்காகவே என் ரசிகர்கள் விழா எடுக்க விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்'' என்கிறார்.
0 comments :
Post a Comment