செல்போன் விற்பனையை அதிகரிக்க தவணை முறையை அறிமுகப்படுத்த நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை இந்நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி ஒலி-பெக்கா கலாஸ்வுவோ தெரிவித்துள்ளார்.
ஏழை வாடிக்கையாளர்களுக்காக வாரம் ரூ. 100 தவணையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 25 வாரங்களுக்கு செலுத்தினால் மொபைல்போன் சொந்தமாகும்.
இந்தத் திட்டத்தை 12 மாநிலங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் கூறினார். ஏற்கெனவே சோதனை அடிப்படையில் இத்திட்டம் கர்நாடகம், ஆந்திரப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. இவ்விரு மாநிலங்களிலும் மொத்தம் 2,500 கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்திப் பார்க்கப்பட்டதில், மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இதை முழு வீச்சில் செயல்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக குறு வணிகக் கடன் நிறுவனங்களுடன் நோக்கியா நிறுவனம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.
இந்தியாவில் பருவ மழை பொய்த்துப் போனதால் தங்களது செல்போன் வர்த்தகம் பாதிக்கப்படாது என உறுதிபடக் கூறிய அவர், குறைந்த விலை செல்போன் தயாரிக்கும் அதே நேரத்தில், உயர் ரக செல்போன்களையும் இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் என்றார்
0 comments :
Post a Comment