தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி வசித்த வீட்டை வாங்குவதில் அவரது கொள்ளுப்பேத்தி கீர்த்தி மேனன் ஆர்வமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதை மகாத்மா காந்தி வசித்த வீட்டின் உரிமையாளரான நான்ஸி பால் தெரிவித்தார்.
எனக்கு சொந்தமான மகாத்மா காந்தி வசித்த வீட்டை வாங்குவதில் ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தியான கீர்த்தி மேனனும் அடங்குவார்.
கீர்த்தி மேனனும், மலேசியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரும் காந்தி வசித்த வீட்டை வாங்கி அதை "காந்தி மையமாக' மாற்ற ஆர்வமாக உள்ளனர்.
நானும் காந்தியவாதி என்பதால் அவர் வசித்த வீடு தொடர்ந்து அவரது மாண்பை பறைசாற்றும் மையமாக இருக்கவே விரும்புகிறேன். வீட்டை நான் யாரிடம் விற்றாலும் இந்த நிபந்தனையுடன்தான் விற்பேன் என்று நான்ஸி பால் தெரிவித்தார்.
காந்தி வசித்த வீடு குறித்து இந்திய அரசும் தன்னிடம் விசாரித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் இந்திய அரசு தரப்பில் இருந்து எதுபோன்ற விவரங்கள் கேட்கப்பட்டது என்பது குறித்து அவர் கூற மறுத்துவிட்டார்.
இனவெறி போராட்டத்தின் போது...: மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோது ஜோகன்னஸ்பர்க்கின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் ஓராண்டு தங்கியிருந்தார்.
தேசத் தந்தை வசித்த அந்த வீடு நான்ஸி பால் என்பவருக்கு சொந்தமானது. இப்போது அவர் அந்த வீட்டை விற்பதற்கு முடிவு செய்து அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
0 comments :
Post a Comment