நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை திறப்பு விழா, மதுரையில் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
மதுரை ராஜா முத்தையா மன்றம் முன் உள்ள கக்கன் சிலை அருகே எட்டரை அடி உயரத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி, சென்னை, தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக நடிகர் சிவாஜி கணேசனுக்கு மதுரையில் வெண்கலச் சிலை அமைக்கப்படுகிறது. சிலை அமைப்புக் குழுத் தலைவரும், சென்னை கமலா திரையரங்கு உரிமையாளருமான வி.என். சிதம்பரம் தலைமையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு நடிகர் கமலஹாசன் தலைமை வகிக்கிறார்.
மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி சிலையைத் திறந்துவைக்கிறார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நெப்போலியன், தமிழக அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, ஆ. தமிழரசி, நடிகை மனோரமா, நடிகர்கள் வடிவேலு, விஜயகுமார், சசிகுமார், இயக்குநர் பி.வாசு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நடிகர் பிரபு நன்றி கூறுகிறார் என்றார்.
முன்னதாக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில், வி.என். சிதம்பரம், மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் மன்னன், காங்கிரஸ் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் பி.காந்தி, சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
0 comments :
Post a Comment