கடலில் “திடீர்” மாற்றம்
சுனாமி பீதி காரணமாக குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களும், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அடித்து பிடித்து ஓடிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான மீனவர்கள் கடலின் தன்மையை நோட்டமிட்டனர்.
இதில் வழக்கத்துக்கு மாறாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அதிகமாக மீன்கள் நடமாட்டம் தென்பட்டது. எனவே இப்போது வலை விரித்தால் அதிகமாக மீன்கள் சிக்கும் என எதிர்பார்த்தனர். அதன்படி அதிகாலை 3 மணிக்கு ஒரு குழுவினரும் 5.30 மணிக்கு மற்றொரு குழுவினரும் 20-க்கும் மேற்பட்ட கட்டு மரங்களில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே இன்று குறைந்த நேரத்தில் அதிக அளவில் வலையில் மீன்கள் சிக்கின. இதில் ஆழமான கடல் பகுதியில் காணப்படும் மீன்கள் கூட 500 அடி தூரத்திலேயே சிக்கியது. இதனால் மீனவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இது பற்றி கடலுக்கு சென்று திரும்பிய மீனவர் மதியழகன் கூறியதாவது:-
சுனாமிக்கு பயந்து ரோட்டில் போய் படுத்தால் எங்கள் வயிற்றுக்கு சோறு போடுவது யாரு? நாங்கள் உழைத்தால்தான் எங்களுக்கு சாப்பாடு. கடந்த சில நாட்களாகவே இந்த பகுதி கடலில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடலின் அடிமட்ட நீரோட்டம் அதிகப்படியாக இருப்பதால் மீன்கள் அதிகமாக கரைக்கு வரத்தொடங்கின.
இதனால் மீனவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கட்டு மரத்துடன் கடலுக்கு சென்று திரும்பியுள்ளனர். சுனாமியின் போது கூட நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டுதான் இருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment