பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகள்:-
* நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பால் அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.
* இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
* சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள்
சாப்பிடுங்கள்.
* மது அருந்தினால் உடலில், பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி போன்ற வைரஸ் கிருமிகள் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.
* மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.
* இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
* இருமல், காய்ச்சல் இருந்தால் டாக்டரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.
* தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவற்றை தொடுவதையும் தவிருங்கள்.
* பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment