பஸ் கட்டண உயர்வு,விலை குறைப்பு குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன.பெட்ரோலியம் விலை உயரும் போதெல்லாம் பஸ் கட்டண உயர்வு தவிர்க்க இயலாததாக உள்ளது என்பது அரசு தரப்பு வாதமாக எப்போதும் உள்ளது.ஹைட்ரஜன் எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பஸ் இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டால் பெட்ரோலிய விலை உயர்வு பஸ்களைப் பாதிப்பதில்லை.ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜினில் ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுகிறது.இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பஸ்களின் இன்ஜினும் வடிவமைக்கப்பட்டால் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.எரிபொருள் டேங்க் பகுதியில் ஹைட்ரஜனை நிரப்பும் பொது அதன் மூலம் எண்பது கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.இதன் மூலம் பஸ் இயக்கப்படும்.
0 comments :
Post a Comment