ஷார்ப் நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிக்கும் பிரிவும் ஜப்பான் நாட்டின் கே.டி.டி.ஐ.நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள,இன்னும் பெயரிடப்படாத,மொபைல் போன் ஒன்றை வடிவமைத்துள்ளன.இது வெளிவரும்போது இந்த ஆண்டின் சிறந்த மொபைல் போனுக்கான விருதைப் பெறலாம்.ஒரு நிமிடம் இதில் பேசினால் 120௦ நிமிடங்களுக்கான பேட்டரி பவர் கிடைக்கிறது.ஆம்,இது ஒரு சோலார் பவர் மொபைல்.சூரிய ஒளியிலிருந்து இந்த போனின் பேட்டரி மின் சக்தியை உருவாக்கி மொபைல் இயங்கத் தருகிறது.
கூடுதலாக இன்னொரு சிறப்பும் இந்த மொபைலுக்கு உள்ளது.இதன் பெரிய டச் ஸ்க்ரீன் வாட்டர் புரூப் செய்யப்பட்டுள்ளது.இதனால் சதா மழை பெய்து கொண்டிருக்கும் நாடுகளில் ஈரத்தால் இந்த போனே பாதிக்கப்படாது.முதலில் ஜப்பான் நாட்டில் மட்டும் கிடைக்க இருக்கும் இந்த மொபைல் விரைவில் உலகின் மற்ற நாடுகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.இதன் விலை குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை.காத்திருப்போம்.
0 comments :
Post a Comment