கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது தவறில்லை.ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது முழு நேரத்தினையும் அதில் செலவிடுவதுதான் மிகப் பெரிய தவறு.சிலர் இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.பேராசியர் ஒருவர் ஆராய்ச்சிக்கென கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளார்.பின்னர் அதில் கேம்ஸ் விளையாடத் தொடங்கியுள்ளார்.தினந்தோறும் ஆய்வு தகவல்களை இடும் முன்னரும் இட்ட பின்னரும் கேம்ஸ் விளையாடாமல் கம்ப்யூட்டரை ஆப் செய்ய மாட்டார்.இறுதியில் அதுவே அவருக்கு வெறியாக மாறி விட்டது.அதனால் அவர் டாக்டர் பட்டம் பெறுவது ஒன்றரை ஆண்டுகள் தள்ளிப் போயிற்று என்று அவரே கூறியுள்ளார்.
கேம்ஸ் விளையாடுவது ஒரு சிறந்த பொழுதுபோக்கு தான்.அது நம் தர்க்க ரீதியான சிந்தனையை,லாஜிக்காக முடிவெடுக்கும் திறனை வளர்க்கின்றன என்பதுவும் உண்மையே.தற்போது மிக அழகான கிராபிக்ஸ் பின்னணியில் கேம்ஸ் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன.சிடி மற்றும் டிவிடியில் கேம்ஸ் பதியப்பட்டும் கிடைக்கிறது.இருப்பினும் பலர் இண்டர்நெட்டில் கட்டணம் செலுத்தியோ,இலவசமாகவோ கிடைக்கும் கேம்ஸ்களையே விரும்பி டவுண்லோட் செய்கின்றனர்.ஆன்லைனிலேயே கேம்ஸ் விளையாடும் வசதியும் நிறைய கிடைக்கிறது.முகம் தெரியாத எங்கோ இருக்கும் ஒருவருடன் இன்டர்நெட் வழியாக விளையாட விளையாட்டுகளைத் தரும் இணைய தளங்களும் உள்ளன.
கேம்ஸ் குறித்த இணைய தளங்கள் அதிக அளவில் இருந்தாலும் அதில் மிகவும் ஆர்வமூட்டும் விளையாட்டுகளைத் தரும் இணைய தளங்கள் மூன்று உள்ளது.அவை
1.Game Daily(www.gamedaily.com)
2.GameSpot(www.gamespot.com)
3.Game Fly(www.gamefly.com)
இவற்றில் முதலில் குறிப்பிட்ட Game Daily என்ற தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றரைக் கோடி பேர் கேம்ஸ் பெற வருகின்றனர்.விளையாட்டுகளை விளையாடத் தேவையான பலவிதமான கன்சோல்கள்,மெசின்கள் மற்றும் டவுண்லோட் செய்யக் கூடிய கேம்ஸ்,அவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் என கேம்ஸ் குறித்து அனைத்து தகவல்களும் கிடைக்கும் தளமாக இது உள்ளது.பல கேம்ஸ் இலவசமாக இங்கு கிடைத்தாலும் பல புதிய கேம்ஸ் பெற கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்.
கேம்ஸ்பாட் (GameSpot)
ஒரு கிராபிக்ஸ் நிறைந்த கேம்ஸ் தளமாகும்.பெர்சனல் கம்ப்யூட்டர்,எக்ஸ் பாக்ஸ் 360,வை,பி.எஸ்.3 என அனைத்து வகை பிரபலமான கேம்ஸ் சாதனங்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.அவ்வப்போது வெளியாகும் புதிய கேம்ஸ் பற்றி இங்கு கருத்துக் கட்டுரைகள் வெளியாகின்றன.இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள கேம்ஸ் தருவதுடன் கட்டணம் செலுத்திப் பெறும் கேம்ஸ்களையும் இந்த தளம் கொண்டுள்ளது.
இந்த தளத்தில் இயங்கும் குழுவில் நீங்களும் இணைந்து கேம்ஸ் குறித்த உங்கள் கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.இந்த தளத்தின் மேலாக உள்ள ஸ்போர்ட்ஸ் ஐகானில் கிளிக் செய்தால் நீங்கள் இன்னொரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லப் படுவீர்கள்.இங்கு பலவகையான வீடியோ கேம்ஸ் பட்டியலிடப்பட்டிருக்கும்.இங்குள்ள நியூஸ் ஐகானில் கிளிக் செய்தால் வீடியோ கேம்ஸ் குறித்த அனைத்து செய்திகளையும் பெறலாம்.
கேம்ப்ளை(Gamefly) என்பது வீடியோ கேம்களுக்கான இன்னொரு அருமையான வெப்சைட்.இந்த தளம் லேட்டஸ்ட் வீடியோ கேம்ஸ்களை தொடந்து புதுப்பித்துத் தந்து கொண்டே இருக்கும்.இதன் மூலம் ஒரு வீடியோ கேமினை அமெரிக்காவில் வாடகைக்குக் கூட பெறலாம்.இதில் தற்போது 6000க்கும் அதிகமான வீடியோ கேம்ஸ் உள்ளன.பலவகையான கேம்ஸ் விளையாடும் சாதனங்களுக்கான (Playstation 3,Playstation 2,PSP,XBox 360,XBox,Wii,GameCube,Nintendo DS,Gameboy etc.) கேம்ஸ்கள் இங்கு உள்ளன.இது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு கேம்ஸ்களை வழங்குமா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
0 comments :
Post a Comment