இலங்கையில் பொல நறுவை மாவட்டம் குருநாகல் பகுதியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி வீட்டுக்கு கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் சென்றிருந்தார்.
அவருக்கு ராணுவ அதிகாரியின் உதவியாளர் உணவு கொண்டு வந்து கொடுத்தார். அந்த உதவியாளர் உடையில் ரத்தக்கறைகள் இருந்தன.
பாதிரியாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த ஊழியர் இருப்பிடத்துக்கு ரகசியமாக சென்று பார்த்தார். அங்கு பிரேத அறை ஒன்று இருந்தது.
குளிரூட்டப்பட்ட அந்த அறைக்குள் நிறைய வாலிபர் களின் உடல்கள் ஆங்காங்கே கிடந்தன. உடல் முழுக்க வெட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பாதிரியார் அந்த உடல்களை சோதித்தார்.
பிணமாக கிடந்த அனைவரும் ஈழத்தமிழ் இளைஞர்கள் என்று தெரிந்தது. அவர்களை கொன்ற ராணுவம் உடல்களை பிரேத அறையில் போட்டுள்ளதை கண்டுபிடித்தார். அந்த உடல்களில் இருந்து கண்கள், சிறுநீரகம், ஈரல், இருதயம் போன்ற உடல் உறுப்புகள் அகற்றப்பட்டிருந்தன.
சிங்கள ராணுவம் திட்டமிட்டு தமிழ் இளை ஞர்களை கொன்று, இப்படி உடல் உறுப்புகளை திருடி தங்களுக்கு பயன்படுத்தி கொள்வதாக கூறப்படுகிறது. பிணமாக கிடந்தவர்கள் வவுனியா, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி முகாம்களில் இருந்து கடத்தி வரப்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
உடல் உறுப்புகளை திருடிய பிறகு தமிழ் இளைஞர்கள் உடல்களை பெரிய லாரிகளில் ஏற்றி சென்று மலையகத்தில் உள்ள சிங்கள கிராமங்களில் புதைத்து விடுவதாக தெரிய வந்துள்ளது.
இந்த தகவல்களை அம்பலப்படுத்தி உள்ள பாதிரியார், அதற்கு ஆதாரமாக புகைப்படங்களையும் இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளார்
0 comments :
Post a Comment