இன்று காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மொத்த தேர்ச்சி விகிதம் 83 சதவீதமாகும்.குளறுபடி இல்லாத தேர்வு,எளிதான வினாத்தாள்கள்,பதட்டம் இல்லாமல் தேர்வெழுதுவதற்காக கூடுதலாக 15 நிமிடம் வழங்கியது போன்ற காரணங்களால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.4% குறைந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறரை லட்சம் மாணவ,மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்துவந்த தேர்வு முடிவு இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.மருத்துவம்,இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு,பிளஸ் 2 முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால்,மாணவர்களும்,பெற்றோர்களும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
சென்னை சூளைமேடு டி.ஏ.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.பூமிகா 1190 மதிப்பெண் பெற்று முதல் ரேங்க் பெற்றுள்ளார்.இதே பள்ளியைச் சேர்ந்த எம்.கார்த்திக் 1188 மதிப்பெண் பெற்று 2வது ரேங்க் பெற்றுள்ளார்.சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குமரன்,ராம்கிஷோர் ஆகியோர் தலா 1186 மதிப்பெண் பெற்று 3வது ரேங்க் பெற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment