மதுரை: அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது.செயற்கையாக தயாரிக்கப்படும் குங்குமம் இடுவதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.இதைத் தவிர்க்க,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் இயற்கை முறையில் குங்குமம் சில ஆண்டுகளாக தயாரிக்கப்படுகிறது. 100 கிலோ விரலி மஞ்சள்,வெண்காரம்,படிகாரம்,கஸ்தூரி மஞ்சள் சீவல் தலா ஆறு கிலோ ஆகியவை மதுரை,பைகாராவில் உள்ள தனியார் அரவை ஆலைக்கு கொண்டு சென்று பொடியாக்கி,கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
மெகா சைஸ் பித்தளை டிரேயில் அதை கொட்டி 10லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு நாட்கள் கலக்கப்படுகிறது.அப்போது,அது சிவப்பு நிறமாக மாறுகிறது.பின்,40கிராம் எடை கொண்ட பாக்கெட்டில் நிரப்பப்படுகிறது.இந்த குங்குமம் தான்,அம்மனை வழிபட வரும் பெண்களுக்கு தரப்படுகிறது.ஐந்து ரூபாய்க்கு பாக்கெட்டாகவும் குங்குமம் விற்கப்படுகிறது.எவ்வளவு நாட்களானாலும்,எவ்வளவு நேரம் நெற்றியில் வைத்திருந்தாலும் பாதிப்பு வராது என்பது இந்த குங்குமத்தின் சிறப்பு.
0 comments :
Post a Comment