சென்னை: பிறந்து இரண்டரை மாதங்களே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்து,மலர் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.சென்னையை அடுத்த தாம்பரத்தில் வசிப்பவர்கள் பாலாஜி-லாவண்யா தம்பதியினர்.இவர்களுக்கு ஸ்ரேயா என்ற இரண்டரை மாதங்களே ஆன குழந்தை உள்ளது.சில தினங்களுக்கு முன் குழந்தை திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.
குழந்தையை அருகில் உள்ள டாக்டர் ஒருவரிடம் காட்டியபோது,இதயத்தில் பாதிப்பு இருக்கலாம் எனத் தெரிய வந்தது.இதற்கிடையே,நிலைமை மோசமானதால்,உயிருக்கு ஆபத்தான நிலையில் மலர் மருத்துவமனையில் உள்ள,"எஸ்கார்ட் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டிற்கு" குழந்தை கொண்டு வரப்பட்டது.தலைமை குழந்தைகள் டாக்டர் மற்றும் நியோனேடாலஜிஸ்ட் டாக்டர் பிரபாகரன்,இதய நோய்ப்பிரிவு டாக்டர் ரவிக்குமார் மற்றும் டாக்டர் சுரேஷ் ராவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் குழந்தையைப் பரிசோதித்தனர்.அப்போது,குழந்தையின் கை மற்றும் கால்களில் நாடித்துடிப்பு இல்லை என்பதும்,மிகக்குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் குழந்தை மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்பட்டதுடன்,இதயத் துடிப்பும் சீராக இல்லை.குழந்தையின் ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகம் இருந்ததுடன்,இதயத்தில் உள்ள "மிட்ரல் வால்வ்" அதன் வடிவத்தில் இல்லாமல் கசிவு ஏற்பட்டுக் கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இத்தகைய மோசமான நிலையிலிருந்த குழந்தை ஸ்ரேயாவை,டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர்,மூன்று மணி நேர அறுவை சிகிச்சை செய்து ஸ்ரேயாவின் இதய பாதிப்பை சரி செய்தனர்."கோர்-டெக்ஸ்" எனப்படும் வளையத்தைப் பயன்படுத்தி வால்வில் இருந்த பாதிப்பு சரி செய்யப்பட்டது.
இதயத் துடிப்பு மற்றும் சுவாசக் கோளாறு குழந்தைகளுக்கு ஏற்படுவது மிகவும் அரிது.சிறிய அளவிலான வால்வ் கிடைக்காது என்பதால் குழந்தைகளுக்கு வால்வ் மாற்று ஆபரேசன் செய்ய இயலாது.இத்தகையான சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து,மலர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
0 comments :
Post a Comment