சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் கற்றாழை உதவுகிறது. அதிக தாகம், அதிக பசி, ஆறாத புண், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பார்வை மங்குதல், எடை குறைதல், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுதல், அளவுக்கு அதிகமான உடல் சோர்வு ஆகியவை சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகள். சில நேரங்களில் இத்தகைய அறிகுறிகள் எதுவும் இல்லாமலே சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உண்டு. உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாத பரபரப்பான வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய் வராமல் இருக்கவும் எப்போதுமே ரத்த சர்க்கரை அளவை இயல்பாக வைத்துக் கொள்ளவும் உணவு முறை, உடற்பயிற்சியுடன் கூடிய வாழ்க்கை முறை மிகவும் உதவும். சர்க்கரை நோய் வந்து விட்ட நிலையில் முறையான மருத்துவ சிகிச்சை அவசியம். சரியான இடைவெளியில் உணவு சாப்பிடுவது அவசியம். தினமும் நடைப் பயிற்சி அவசியம். அவசரம், பரபரப்பு, கோபம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் "அலோசன் (சோற்றுக் கற்றாழை) ஹெல்த் டிரிங்'க்கையும் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு இயல்பானதாக இருக்கும். அதாவது, இந்த பானம் இன்சுலின் சுரப்பை சீர்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளும்.
"அலோசன்' : சர்க்கரை நோயாளிகளின் நண்பன்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment