டெக்ஸ்ட் மெயில்களுடன் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் சிறிய படங்களே எமோட்டிகான்களாகும்(Emoticon).Emotion+Icon என்ற இரு ஆங்கிலச் சொற்களின் இணைந்த சொல்லே இது.
கூகுள் நிறுவனத்தின் பிரபலமான கூகுள்மெயில் சர்வீஸ் அண்மையில் பல கூடுதல் எமோட்டிகான்களை வெளியிட்டுள்ளது.கூகுள் லேப்ஸ் இஞ்சினியர்கள் இவற்றை உருவாக்கியுள்ளனர்.ஜப்பானிய நிறுவனத்தின் டெவலப்பர்கள் இவற்றை உருவாக்கியுள்ளனர்.இவற்றைப் பெற ஜிமெயிலில் செட்டிங்க்ஸ் கிளிக் செய்து பின் கூகுள் லேப்ஸ் சென்று அங்கே கீழாக ஸ்குரோல் செய்து Extra Emoji option செல்லவும்.பின் இதன் அருகே உள்ள Enable என்ற கட்டத்தில் செக் செய்திடவும்.அதன்பின் சேவ் பட்டன் கிளிக் செய்து வெளியேறவும்.இதன் பின் நீங்கள் அமைத்திடும் மெயில்களில் இந்த கூடுதல் எமோட்டிகான்களை அமைத்திடலாம்.புதிய இந்த குறும்படங்களைப் பார்த்து உங்கள் ஆப்த நண்பர்கள் சந்தோஷப்படலாம்.இந்த எமோட்டிகான்கள் கூகுள் டாக் பிரவுசிங் பிரிவில் இணைக்கப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
0 comments :
Post a Comment