இணைய உலகில் தேடுதலுக்கான் சர்ச் இஞ்சின் என்றால் அது கூகுள் தான்.அதன் வேகத்தையும் வகை வகையான வசதியையும் மிஞ்ச இன்னும் எந்த சர்ச் இஞ்சினும் வரவில்லை.இருப்பினும் அவ்வப்போது பல சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் கிடைக்கத் தான் செய்கின்றன.அவற்றில் இரண்டு சர்ச் இஞ்சின்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக www.lemmefind.us என்னும் தளத்தில் உள்ள lemmefind என்னும் சர்ச் இஞ்சின்.இதன் ஹோம் பேஜ் கவர்ச்சியாக இல்லை என்றாலும் கூகுள் போல ஒன்றுமில்லாமல் இல்லை.தளத்தின் மேலாக ஒரு ட்ராப் டவுண் லிஸ்ட் ஒன்று கிடைக்கிறது.இதில் நாம் நாடுவாரியாக அல்லது உலக நாடுகள் அனைத்திலுமாக தேடுதலை வரையறை செய்திடலாம்.
சர்ச் பாக்ஸ் அருகிலேயே பட்டன்கள் தரப்பட்டுள்ளன.இந்த பட்டன்களைக் கிளிக் செய்து தேடுதலைச் சுருக்கலாம்,விரிக்கலாம்.எடுத்துக்காட்டாக இதில் உள்ள பட்டன் இமேஜ் என்னும் பட்டனைக் கிளிக் செய்தால் ஒரு குறிப்பிட்ட இமேஜ் சார்ந்த தேடுதல் விடைகள் மட்டுமே உங்களுக்குக் காட்டப்படும்.
இதே போல வீடியோ,ஆடியோ,மை ஸ்பேஸ்,விக்கிபீடியா எனத் தேடுதல் தளங்களைக் குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வரலாம்.அது மட்டுமின்றி ஒவ்வொரு தேடுதல் விடையையும் உடனே வேறு நண்பர்களுக்கு இமெயில் மூலம் அனுப்ப வேண்டுமாயின் அதற்கும் பக்கத்தின் கீழாக வசதி தரப்பட்டுள்ளது.மேலே சொன்னது போல சுவாரஸ்யமான இன்னொரு தேடுதல் தளம் Joongel இந்த தளம் தன் தேடுதலை அதனைப் பயன்படுத்துவோர் வாழும் இடத்திற்கேற்ப அமைத்துக் கொள்கிறது.மேலும் கூகுள்,ஹிட்வைஸ்,கம்பீட்,காம்ஸ்கோர்,நீல்சன்,நெட்ரேட்டிங்க்ஸ்,குவாண்டெஸ்ட் மற்றும் பிற ஆய்வு தளங்கள் தரும் இன்டர்நெட் டிராபிக் ஆய்வின் அடிப்படையிலும் அமைக்கிறது.இந்த தளத்தின் ஹோம் பேஜ் சென்றால் (www.joongel.com) பட்டன்கள்,டேப்கள் எனக் குவிந்து கிடக்கின்றன.இதனால் தான் இதன் தேடல் முடிவுகள் நமக்குச் சற்று தாமதமாகக் கிடைக்கின்றன.
ஹோம் பேஜின் மெயின் இடத்தில ஒவ்வொரு பிரபலமான சர்ச் இஞ்சினுக்கான பட்டன்கள் தரப்பட்டுள்ளன.இவற்றுடன் சில பிளாக்குகளுக்கும் பட்டன்கள் உள்ளன.பக்கவாட்டிலும் சில பட்டன்கள் தரப்பட்டிருக்கின்றன.இவற்றைக் கொண்டு உங்கள் தேடல்களை வரையறை செய்திடலாம்.இதன் சர்ச் பாக்ஸ் திரையின் மேல் பாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஒரு சர்ச் பட்டனுக்குப் பதிலாக இரண்டு பட்டன்கள் தரப்பட்டுள்ளன.முதல் பட்டன் உங்கள் தேடலின் வகைக்கானது.இரண்டாவது தேடலைத் தொடங்கக் கட்டளை கொடுப்பதற்கானது
இந்த தளத்தின் பெயர் Joongel என்றாலும் இது jungle என்ற சொல் திரிந்து வந்ததாகத் தான் இருக்கும்.இன்டர்நெட் உலகை ஒரு காடு (jungle) எனக் கொண்டு இந்த தேடுதல் தளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த இணைய தளத்தின் சர்ச் இஞ்சின் தற்போது சோதனை நிலையில் தான் இயக்கப்படுகிறது.கொஞ்சம் தாமதமாக விடைகளைத் தருவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம்.
0 comments :
Post a Comment