நீங்களும் அழகு ராணிதான்

அழகான முகத்தில் சுருக்கம் நீங்க சுலப வழிகள்.....

வயதாக வயதாக முகச்சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான்.ஆனால்,நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில செயல்களை மேற்கொள்ளும் பொது முகச் சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தலாம்.அதே போல்,சில செயல்கள் மூலம் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம்.உங்கள் முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான டிப்ஸ் இதோ....
  • சந்தனப் பொடியுடன்,பன்னீர்,கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.
  • சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும்.இப்படி செய்தால்,நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும்.வறண்ட சருமம் உடையவர்கள்,வெறும் கேரட்டை மட்டும் முகத்தில் தேய்த்து வர,முகச்சுருக்கம் உண்டாவது தாமதமாகும்.அதே போல் கேரட் சாறுடன் தேன் கலந்து தடவி,சிறிது நேரம் கழித்து மென்மையான ஈரத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால்,மெல்லிய சுருக்கங்கள் நீங்கும் வாய்ப்பு உள்ளது.
  • வெங்காயத்தை அரைத்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து,சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.இவ்வாறு செய்தாலும் முகச்சுருக்கம் மறையும்.பப்பாளிப் பலத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.
  • முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேனை கலந்து,பூச முகச்சுருக்கம் குறையும்.அப்படி செய்யும் போது,கண்களை சுற்றியுள்ள பகுதிகளை தவிர்ப்பது நல்லது.இதே போல்,வெள்ளரிச்சாறுடன்,தேன் கலந்தும் முகத்தில் பூசலாம்.
  • பாதாம் பருப்பை பவுடராக்கி,அத்துடன் சிறிதளவு சோயாமாவு மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.இதனால் சுருக்கம் நீங்கும்.
  • அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால்,விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும்.
  • பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்.பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும்.இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.
  • "ஓட்" மாவுடன் சந்தனப் போடி மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ளரி விதையை நன்றாக அரைத்து அதனுடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும்.
  • அடிக்கடி நெற்றியை சுருக்கும் பழக்கம் உடையவர்கள்,அந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.இதனால்,நெற்றியில் சுருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக,சில தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே கோபப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
முகம் பொலிவு பெற சில வழிகள்:
  • கடலை மாவுடன்,பன்னீர் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மென்மையாக பொலிவுடன் காணப்படும்.
  • ஆரஞ்சு பழச்சாறு,முல்தானி மட்டி,தக்காளிசாறு,பன்னீர் ஆகியவற்றுடன்,சந்தனப் பொடி மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால்,முகம் பொலிவு பெரும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes