ஒரு பெண்,மொபைல் போன் பேச்சுக்கு மட்டும் எத்தனை ஆண்டு செலவழிக்கிறாள் என்று தெரியுமா,நான்கு ஆண்டுகள்.மொபைல் போனில் பேசுவதில் ஆண்களை விட,பெண்கள் தான் அதிக அளவில் நேரத்தை செலவழிக்கின்றனர் என்பது தெரிந்தது தான்.இது தொடர்பாக லண்டன் "சன்" பத்திரிக்கை ஒரு ஆய்வு நடத்தியது.பிரிட்டன் பெண்கள்,தங்கள் வாழ்நாளில் இரண்டு லட்சத்து 88 ஆயிரம் முறை மொபைல் போனே பயன்படுத்துகின்றனர்;அதாவது,மொபைல் போனே பேசுவதற்கு மட்டும் நான்காண்டுகள் செலவழிக்கின்றனர்.பெண்களை விட,ஆண்கள் மொபைல் பேசுவது குறைவுதான்.அவர்கள் தங்கள் வாழ்நாளில் இரண்டு லட்சத்து 77 ஆயிரம் முறை மொபைல் பேசுகின்றனர்.அதாவது,மூன்றே கால் ஆண்டுகள் செலவிடுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
"பிரிட்டனில் உள்ள சராசரி பெண்கள்,ஆண்களை வைத்து இந்த சர்வே எடுக்கப்பட்டது.சர்வே அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.மொபைல் போன் மீதான மோகம் அவர்களிடம் அதிகம்.வயதாக ஆக அந்த மோகம் குறைந்து வருகிறது".என்றும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பிரிட்டனை பொருது மட்டும் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இப்படி ஒரு சர்வே எடுத்திருந்தால்,பிரிட்டனை தோற்கடித்து இருக்குமோ.
0 comments :
Post a Comment