பிரசன்டேஷன் ஸ்லைட்களில் மாற்றங்கள்
மிகப் பெரிய பிரசன்டேஷன் பேக்கேஜ் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள்.அதனைக் காண்கையில் சில ஸ்லைடுகளில் மாற்றங்களை உருவாக்க எண்ணுகிறீர்கள்.இரு வேறு ஸ்லைடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த ஒவ்வொன்றுக்கும் இடையே தாவிச் சென்று (ஸ்குரோல் செய்தும்,பேஜ் அப் மற்றும் டவுண் கீகளை அழுத்தியும் ஸ்லைட் சார்டர் பயன்படுத்தியும்) மாற்றங்களை ஏற்படுத்துவது சிரமமாயிருக்கும்.ஒவ்வொன்றிலும் உள்ள சிலவற்றை காப்பி செய்வதும் இன்னொன்றில் பேஸ்ட் செய்வதும் குழப்பத்தை ஏற்படுத்தும்.இந்த மாதிரி நேரத்தில் தான் வெறுப்பாக உணர்வீர்கள்.இதற்கு மாற்றாக ஏதேனும் சுருக்கு வழிகள் உள்ளதா?என்று கவனிக்க ஆரம்பிப்பீர்கள்.இதற்கு வழிகள் உள்ளன.
பவர் பாயிண்ட் ஒரே பிரசன்டேஷனை பல விண்டோக்களில் திறக்க வழி செய்கிறது.ஒரே நேரத்தில் ஒரே பிரசன்டேஷனை வெவ்வேறு இடங்களில் திறந்து பணியாற்றலாம்.எந்த பிரசன்டேஷன் பேக்கேஜில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமோ அதனைத் திறக்கவும்.பின் Window மெனு சென்று அதில் New Window என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.பவர் பாயிண்ட் அதே பிரசன்டேஷனை இன்னொரு முறை திறந்திடும்.இதனைக் கீழே டாஸ்க் பாரில் இரு பிரசன்டேஷன் டேப்கள் இருப்பதை வைத்து நீங்கள் உறுதி செய்திடலாம்.
இப்போது ஒரு விண்டோவில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய ஸ்லைடுக்கு நீங்கள் செல்லலாம்.இன்னொரு விண்டோவில் இருக்கும் ஸ்லைடுகளிலும் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.இவ்வாறு இரு வேறு விண்டோக்களுக்குச் செல்ல நீங்கள் New Window கீகளைப் பயன்படுத்தலாம்.அல்லது கண்ட்ரோல்+டேப் கீகளைப் பயன்படுத்தலாம்.
இப்படியே மாற்றங்களை இரண்டிலும் ஏற்படுத்தினால் இறுதியான பிரசன்டேஷன் எது என்பதில் திணறல் ஏற்படுமே.ஒன்றில் மட்டும் ஏற்படுத்தினால் தானே நல்லது என்று கவலைப்படலாம்.கவலையே பட வேண்டாம்.ஒரு ஸ்லைடில் ஏற்படுத்தின மாற்றங்களை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த விண்டோவிலும் அதே ஸ்லைடைத் திறந்து பாருங்கள்.ஆஹா!!அதிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
ஸ்லைடில் உள்ள ஸ்டைல் மற்றும் மேட்டர் ஆகிய அனைத்தும் மாற்றங்களுடன் இருப்பதைக் காணலாம்.இப்போது சிலருக்கு இன்னொரு ஆசை வரலாம்.இரண்டு விண்டோக்களில் மட்டும் தான் இவ்வாறு திறந்து பணியாற்றலாமா? மூன்றாவது, நான்காவது என இன்னும் சில விண்டோக்களில் திறந்து பணியாற்றினால் மாற்றங்கள் அனைத்திலும் ஏற்படுமா?என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.
தாராளமாக அவ்வாறே செய்யலாம்.அனைத்து விண்டோக்களையும் ஒரே நேரத்தில் சிறியதாகத் திறந்து வைத்து பணியாற்றும் வழியையும் Cascade அல்லது Arrange All என்ற கட்டளை மூலம் மேற்கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment