தினமும் சராசரியாக நூறு முடிகள் உதிர்வது வழக்கமானது தான்.உதிர்ந்தது பிறகு அதுவாகவே உதிக்கும்.வாசனைத் தைலங்களை விட தேங்காய் எண்ணெய் தான் முடிக்கு நல்லது.வாசனைத் தைலங்களே தேங்காய் எண்ணெயைக் கொன்னு தான் தயாரிக்கப்படுகின்றன.
கோவில்களில் முடி இறக்கி மொட்டை போட்டுக் கொள்பவர்கள் தாங்களே ஒரு புது பிளேடு வாங்கிச் செல்வது உசிதம்.நமக்கு மொட்டை அடிப்பவர் கை சுத்தமாக இருக்கிறதா என்பதையும் கவனிக்கவும்.ஆண்கள் வாரத்துக்கு ஒரு முறையேனும் அழுக்குப் போக முடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.தினமும் ஒருமுறை தலை வாரினாலே போதும்.பாக்கெட் சீப்பைக் கொண்டு அடிக்கடி வாரிக் கொண்டே இருந்தால் முடி விரைவில் வலுவிழந்து பின் உதிரும்.
உங்கள் சீப்பால் மட்டுமே தலைவாரிக் கொள்ளுங்கள்.முடிக்கு ஆயில் மசாஜ் தேவையில்லை.அதனால் எந்தப் பயனும் இல்லை.முடிமாற்றல் என்பது சாத்தியமான ஒன்று தான்.இப்போது பைபர் மூலம் கூட வழுக்கைத் தலையில் செயற்கை முடியை உருவாக்குகின்றனர்.
ஹேர் டிரையர்கள் பயன்படுத்துவது உங்கள் தலைக்கு நீங்களே கொல்லி வைத்துக் கொள்வது போல ஒவ்வொருவர் சருமத்துக்கும்,கூந்தலுக்கும் ஏற்ற ஹேர் டைகள் தான் பயன்படுத்த வேண்டும்.சரி வராத ஹேர் டை மூலம் அலர்ஜி,நரை இன்னும் பரவுவது போன்ற சிக்கல்கள் உருவாகும் என்று சென்னை மருத்துவக் கல்லூரி தோல் நோய் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் டி.பிரபாவதி கூறினார்.
0 comments :
Post a Comment