பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுவையில் மார்ச் மாதம் நடந்த எஸ்எஸ்எல்சி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.

இந்த வருடம்  தமிழகம் மற்றும் புதுவையில் மார்ச் 25-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 6541 பள்ளியில் இருந்து 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகள் பரீட்சை எழுதினார்கள். இவர்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் மாணவிகள் பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 287 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
சென்னையில் 16,369 பேர் பரீட்சை எழுதினார்கள். 10-ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன்பாடத்திட்டதின் கீழ் 4697 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
 
ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டம் கீழ் 1361 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்.

 59 ஆயிரத்து 125 மாணவர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகப் பங்கேற்றனர்.

இதைத் தவிர, சுமார் 50 ஆயிரம் மாணவ- மாணவிகள் தனித் தேர்வர்களாகத் தேர்வுகளை எழுதினர்
.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ள மாணவ-மாணவிகள் தேர்வு முடிவு, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையின் இணையதளம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை தொடர்பான அனைத்து விவரங்களையும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளிகள்   இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் வழியாக பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள், பெயர், இ-மெயில் முகவரி, தேர்வு பதிவு எண், தொலைபேசி அல்லது செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இன்று முதல் பள்ளிக்கல்வி இணைய தளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வு முடிவு வெளி யானவுடன் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும். இதற்காக பள்ளிக்கல்வித்துறை கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. ஆனால் எஸ்.எம்.எஸ். அனுப்ப பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைந்த பட்ச சர்வீஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கிறது.

இதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் பி.எஸ்.என்.எல்-லுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தேர்வு முடிவு வெளியிட்ட அடுத்த நிமிடத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்தவர்களுக்கு முடிவு அனுப்பப்படும். மாணவர்கள் எந்த கஷ்டமும் படாமல் எளிதாக தேர்வு முடிவை அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித் துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுவரை 20 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு முடிவு கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுத் தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

http://results.dinamani.com  

www.pallikalvi.in  

tnresults.nic.in

dge1.tn.nic.in  

dge2.tn.nic.in

www.tngdc.in  

www.kalvimalar.com
 


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes