ஒரு பெண்ணுக்கு நான்கு கிலோ எடை கொண்ட,வீங்கிப் பருத்த கர்ப்பப் பையை நீக்கி,டில்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.உத்திரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தை சேர்நதவர் நீலம் அகர்வால்(45).இவருக்கு 3.96 கிலோ அளவுக்கு கர்ப்பப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கர்ப்பப்பை பெரிதாக இருந்ததால்,நெஞ்சு வரைக்கும் விரிந்திருந்தது.இதனால்,எட்டு மாத கர்ப்பிணிப் பெண் போல் தோற்றம் கொண்டிருந்தார்.இருப்பினும்,இதை அகற்ற தன் வயிற்றுப் பகுதியை திறநது அறுவைச் சிகிச்சை செய்ய அவர் விரும்பவில்லை.அவரை பரிசோதித்த டில்லி ஸ்ரீகங்காராம் மருத்துவமனை டாக்டர்கள்,லேப்ரோஸ்கோபிக் முறையில் அந்த பெரிய கர்ப்பப் பையை அகற்றினர்.இந்த வகை சிகிச்சை செய்தால்,நோயாளி விரைவில் குணம் அடைய முடயும்.
ரத்தம் வெளியேறுவது குறைவாக இருப்பதோடு,வலியும் குறைவாகவே இருக்கும்.அதனால்,லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை செய்ததாக டாக்டர்கள் கூறினர்.லேப்ரோஸ்கோபிக் சிகிச்சையில் டாக்டர்கள் போட்ட ஒரே ஒரு துளை மட்டும் ஒண்ணரை செ.மீ.,அளவுக்கு பெரியது.மற்றவை சிறியன.ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அறுவைச் சிகிச்சை நடந்தது.ஆறு பகுதிகளாக கர்ப்பப்பை வெட்டி எடுக்கப்பட்டது.பெண்களுக்கு வழக்கமாக 70 கிராம் எடை கொண்ட கர்ப்பப்பை தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன் கின்னஸ் சாதனையாக 3.2 கிலோ கட்டி அகற்றப்பட்டிருக்கிறது.
0 comments :
Post a Comment