இளம் பெண்கள் கடத்தல் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்ட மாநிலங்களில்,தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 2007ம் ஆண்டில் இங்கு 1,199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதற்கு அடுத்ததாக,கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தலா 612 வழக்குகளும்,மகாராஷ்டிராவில் 361 வழக்குகளும் பதிவாகியுள்ளன.பெண்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள கேரளாவில்,200 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.ஜம்மு-காஷ்மீரில் ஒன்றும்,சிக்கிமில் இரண்டும்,உத்தரகண்டில் ஒன்பதும்,ஜார்க்கண்ட்,சட்டீஸ்கரில் தலா 14 வழக்குகளும் பதிவாகியுள்ளன.வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர்,மிசோரம்,திரிபுரா,இமாச்சல பிரதேசம்,அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் பெண்கள் கடத்தல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை.பெண்கள் கடத்தல் தொடர்பாக நாடெங்கிலும் கடந்தாண்டு 3,568 வழக்குகள் பதிவாகின.9,861 பேர் கைது செய்யப்பட்டனர்.3,220 பேர் தண்டிக்கப்பட்டனர்.தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மட்டும் 3,700 பேர் கைது செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment