இணைய பிரவுசர் பயன்பாட்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கும் பயர்பாக்ஸ் பிரவுசர் விரைவில் பல்முனை (MultiProcess)இயக்கத் திறனைப் பெற இருக்கிறது.ஏற்கனவே இந்த வகை செயல்பாடு கூகுல் குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 8 ல் உள்ளது.இந்த திறன் இருந்தால் பிரவுசர் திறக்கும் ஒவ்வொரு டேப் தளத்திற்கும் ஒரு செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
இதனால் ஒரு டேப்பில் இயங்கும் இணைய தளத்தினால் பிரச்சனை ஏற்பட்டு அது முடக்கப்பட்டால் முழு பிரவுசருக்கும் முடக்கப்பட மாட்டாது.மற்ற டேப்களில் திறக்கப்பட்ட தளங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.
இதுபோல பிரித்து தளங்கள் இயங்குவது பிரவுசருக்கு ஒரு நிலைத்த தன்மையையும் பாதுகாப்பினையும் தரும்.இயங்கும் திறனும் அதிகரிக்கும்.இந்த குறிப்பிட்ட வசதி அநேகமாக வரும் ஜூலையில் தரப்படலாம்.
இந்த திறனை அளிப்பது மட்டுமின்றி வேறு சில வசதிகளையும் இணைத்த புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு அடுத்தடுத்து வர இருக்கிறது. முழுமையான பதிப்பு இன்னும் ஓராண்டில் பல புதிய வசதிகளுடன் தரப்படும் என்று தெரிகிறது.
0 comments :
Post a Comment