மினி மோடில் மீடியா பிளேயர்

விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குகிறீர்கள் .அதன் மூலமாக ஒரு ஆடியோ அல்லது வீடியோ பைலை பாட அல்லது ஆட வைக்கிறீர்கள்.என்ன நடக்கிறது?. திரை முழுவதும் தெரிகிறது.இந்த புரோகிராமின் ஷார்ட் கட் ஐகான் அல்லது ஆல் புரோகிராம்ஸ் சென்று அக்சசரீஸ், என்டர்டெய்ன்மெண்ட் என்று சென்று அதில் விண்டோஸ் மீடியா பிளேயரைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து இயக்குகிறீர்கள்.கம்ப்யூட்டரில் மற்ற பணிகளை மேற்கொண்டிருக்கையிலே ஒரு ஓரமாக சிறிய வடிவத்தில் மீடியா பிளேயர் இயங்க வேண்டுமா?விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கத்திற்கு கொண்டு வாருங்கள்.பின் டாஸ்க் பாரில் ஒன்றும் இல்லாத இடத்தில ரைட் கிளிக் செய்திடுங்கள்.

எழுந்து வரும் சிறிய மெனுவில் டூல் பார்ஸ் என்னும் பிரிவில் கிளிக் செய்தால் இன்னொரு துணை மெனு கிடைக்கும்.இதில் விண்டோஸ் மீடியா பிளேயர் என்று இருப்பதில் சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்துங்கள்.டாஸ்க் பாரின் வலது மூலையில் சிறிய அளவில் விண்டோஸ் மீடியா பிளேயரின் மெனு பார் காட்டப்படும்.இதில் நீங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். வீடியோ பைலைக் கிளிக் செய்தால் சிறிய கட்டத்தில் வீடியோ காட்சிகள் காட்டப்படும்.அதைப் பார்த்துக் கொண்டே மற்ற வேலைகளிலும் ஈடுபடலாம்.இது விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 9 வைத்திருப்பவர்களுக்கு.உங்களிடம் 10 பதிப்பு அல்லது 11 உள்ளதா?

விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கும்போதே சிறியதாகத் தேவையான கண்ட்ரோல்களை மட்டும் வைத்து இயக்க முடியும்.முழுமையாகத் திரை முழுவதும் இன்றி சிறியதாக இது திரையில் காட்சி அளிக்கும்.இதனை Mini Player Mode என்று கூறுகிறார்கள்.இதன் மூலம் இன்னும் கூடுதல் வசதிகளையும் மேற்கொள்ளலாம்.குறிப்பாக மியூசிக் பைல்களைத் திறந்து இசையை மட்டும் ரசிக்க விரும்புபவர்களுக்கு முழுமையான மீடியா பிளேயரின் காட்சி வேண்டாமே!

மினி பிளேயர் மோடில் இதனைத் திறக்கும்படி செட் செய்திட விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோவில் Tools தேர்ந்தெடுக்கவும்.பின் அதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும்.இந்த விண்டோவில் "Start the Mini Player for file names that contain this text"என்ற வரியுடன் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் தென்படும்.இதில் ஏற்கனவே voiceatt.wav என்ற பைல் டைப் பெயர் தென்படும்.நீங்கள் உங்களின் அனைத்து எம்பி3 பைல்களும் இந்த மினி மோடில் திறக்கப்பட வேண்டும் என்றால் இந்த இடத்தில .mp3 என்று டைப் செய்திடவும்.அல்லது குறிப்பிட்ட டிரைவ் அல்லது போல்டரில் உள்ள பைல்களை இயக்குகையில் மினி மோடில் திறக்க வேண்டும் என எண்ணினாலும் அந்த டிரைவின் எழுத்து (D:/E:) என எதனையேனும் அமைக்கலாம்.அல்லது போலடரின் பாத் கொடுக்கலாம்.எந்த ஆடியோ மற்றும் வீடியோ பைலாக இருந்தாலும் மினி மோடில் தான் இயக்கப் பட வேண்டும் என முடிவு செய்தால் ஜஸ்ட் ஒரு கோலன் (:) டைப் செய்தால் போதும்.ஒற்றை நினைவில் கொள்ள வேண்டும்.முதலில் கூறியபடி இந்த வகை மோடில் வீடியோ காட்சிகளை இயக்க முடியாது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes