சீனாவிலிருந்து சாக்லேட்டுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் இதைத் தெரிவித்தார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால் சார்ந்த பொருட்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் 'மெலமைன்' கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சீனா உட்பட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சர்வதேச உணவுத் தரத்தில் இருக்கிறதா என்று சோதித்த பிறகே இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்படுவதாகவும் அவர் அவையில் குறிப்பிட்டார்.
சீனாவில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளில் அதிகளவு ரசாயன மூலப்பொருள் கலந்திருப்பதால் அதற்கு ஏற்கெனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாக்லேட் இறக்குமதியும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment