கம்ப்யூட்டரில் மட்டுமின்றி தனியாகவும் வைத்து இயக்கம் எம்பி3 பிளேயர்கள் தற்சமயம் அதிக அளவில் விற்பனையாகி பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் நமக்குப் பிடித்த அணைத்து பாடல்களையும் நாம் இந்த பிளேயர்களில் கேட்க முடிவதில்லை.ஏனென்றால் அவை எம்பி3 பார்மேட்டில் இல்லை என்பதே காரணம் ஆகும்.சிடியில் பதிந்து கிடைக்கும் இந்த பாடல்கள் நம் மனதை மயக்குகின்றன.ஆனால் பிளேயருக்கு மடங்க மறுக்கின்றன.என்ன செய்யலாம்?
எப்படி சிடியில் உள்ள பாடல்களை எம்பி3 பார்மேட்டில் கொண்டு வருவது என்று பார்க்கையில் இணையத்தில் உள்ள ஒரு இலவச புரோகிராம் கண்ணில் பட்டது.அது சிடி ரிப்பர் (CD Ripper ) என்னும் புரோகிராம் ஆகும்.இதனை வைத்துக் கொண்டு எப்படி இந்த பார்மெட் மாற்றத்தினை கொண்டு வரலாம் என்று பார்க்கலாம்.முதலில் http://download.cnet.com/FreeCDRipper/30002140_410396883.htmlஎன்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த புரோகிராமினை டவுன்லோட் செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்திடவும்.
பின் இந்த புரோகிராமினை இயக்குங்கள்.அதன்பின் எந்த டிரைவில் இந்த புரோகிராம் உங்கள் மியூசிக் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும்.இதற்க்கு மேலே இருக்கும் Options என்ற டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Save and Filename என்ற டேப்பை தேர்ந்தெடுக்கவும்.அங்கு இருக்கும் போல்டர் ஒன்றை தேர்ந்தெடுக்கவும் .இதனை ஒருமுறை செய்தால் போதும்.அதுவும் சிடி ரிப்பர் புரிகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் செய்தால் போதும்.இனி கம்ப்யூட்டரில் உள்ள சிடி டிரைவில் எந்த சிடியிலிருந்து பாடல்களைப் பெற்று எம்பி3 பார்மட்டிற்கு மாற்ற வேண்டுமோ அந்த சிடியினை செருகவும்.செருகியவுடன் ,மேலே தரப்பட்டிருக்கும் டிவைஸ் மெனுவிலிருந்து உங்கள் சிடி டிரைவை தேர்தெடுக்கவும்.
பின் வலது புறம் உள்ள Output Format பாக்ஸில் MP3 என்பதனை த்ர்ந்தேடுக்கவும்.பின் சிடி ரிப்பர் விண்டோசின் கீழாக உள்ள "டி" என்பதில் கிளிக் செய்திடவும்.இதனால் பாடல்களின் ஆர்டிஸ்ட் பெயர் முதலாக அணைத்து தகவல்களும் பதியப்படும்.அடுத்து Extract என்பதில் கிளிக் செய்தால் அணைத்து பாடல்களும் எம்பி3 பார்மேட்டில் மாற்றப்பட்டு கிடைக்கும்.பின் இந்த எம்பி பாடல்களை உங்கள் மீடியா பிளேயருக்கு மாற்றி செல்லுமிடமெல்லாம் இசைக்க வைத்து ரசிக்கலாம்.
0 comments :
Post a Comment