இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 8 இப்போது பழக்கத்திற்கு வந்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.இதில் உள்ள பேவரிட்ஸ் பட்டியல் வழக்கம் போல் நமக்குப் பிடித்த வெப்சைட்டுகளை எளிதான கிளிக்கில் பெற்றுத் தருகிறது.இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் திறக்கப் படாமல் இருக்கும் போதும் இந்த பேவரிட்ஸ் பட்டியலில் உள்ள தளங்களை திறக்கலாம்.இதனை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம்.
1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 8-ல் கமான்ட் பாரில் பேவரிட்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. இதில் உள்ள பேவரிட் தளங்களில் எதற்கு ஷார்ட் கட் கீ அமைக்க விரும்புகிறீர்களோ அதனை ரைட் கிளிக் செய்திடவும்.மெனுவில் ப்ராபர்டிஸ் தேர்ந்தெடுக்கவும்.இப்போதுஅந்த பேவரிட் தளத்திற்கான ப்ராபர்டிஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.இதில் "Web Document" என்னும் டேப்பினை தேர்ந்தெடுக்கவும்.
3. Shortcut key என்று இருப்பதற்கு அடுத்த படியாக ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பினை டைப் செய்திடவும்.இந்த ஷார்ட் கட் கீ வேறு அப்ளிகேசன் புரோகிராம் அல்லது விண்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டம் பயன்படுத்தாதாய் இருக்க வேண்டும்.இதற்க்கு Alt,Ctrl,மற்றும் Shift போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
0 comments :
Post a Comment