சினிமா விமர்சனம் -- தலை எழுத்து
இளம் விஞ்ஞானி ரிச்சர்ட் ராஜ். ஊனமுற்றோர் நலனில் அக்கறை உள்ளவர். அவர்கள் மனதில் இருப்பதை கண்டறியும் சாப்ட்வேர் ஒன்றை கண்டு பிடிக்க ஆராய்ச்சி செய்கிறார். அது வெளிவந்தால் தங்கள் ஊழல்கள் அம்பலமாகி விடும் என அரசியல்வாதிகள் அச்சப்படுகின்றனர். எனவே ஆராய்ச்சியை கைவிடுமாறு எச்சரிக்கின்றனர்.
மிரட்டலுக்கு பணியாமல் காதலி பூஜாவுடன் இணைந்து முயற்சியை தொடர்கிறார்.
ஒரு கட்டத்தில் வில்லன் கார் ஒன்று ரிச்சார்ட்டை பின் தொடர்ந்து விரட்டி அவரது காரை விபத்துக்குள்ளாக்கி மறைகிறது. இதில் ரிச்சார்ட் மூளை பாதித்து பேச முடியாதவராகிறார். காதலி பூஜாதான் ஆள் அனுப்பி கொலை செய்ய முயற்சித்தது தெரிய அதிர்ச்சி. ரிச்சர்ட் ராஜ் கண்டுபிடிப்பை அபகரித்து வேறு கம்பெனிக்கு விற்க கோடிக்கணக்கில் பேரம் பேசுகிறார். காதலி திட்டம் பலித்ததா? ரிச்சர்ட் ராஜ் நிலைமை என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்...
விஞ்ஞான ரீதியிலான ஹைடெக் கருவை சமூக அவலங்களுடன் கோர்த்து படமாக்கிய இயக்குனர் எத்திராஜ் முயற்சி வித்தியாசம். இளம் விஞ்ஞானியாக மிடுக்கு காட்டும் ரிச்சர்ட் ராஜ் மூளை பாதித்து முடங்கியதும் நடிப்பில் பிரமாதபடுத்துகிறார். சைக்கோ காதலியிடம் சிக்கி அவஸ்தைபடும்போது பரிதாபப்பட வைக்கிறார்.
பூஜா வில்லியாவது எதிர்பாராதது. பக்ரு காமெடி கலகலப்பு.
“சீன்”களில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். சாப்ட்வேர் கண்டுபிடிப்பு வில்லன் கூட்டத்தின் எதிர்ப்புக்களை பிரமாண்டபடுத்தாது குறை... டொமைக்சாபியோ, ஒளிப்பதிவு, காட்வின் இசை துணை நிற்கின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment