எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பட்டப் படிப்பு முடித்துவிட்டு 5 ஆண்டு வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்களுக்கு உதவித் தொகை பெற விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
எஸ்.எஸ்.எல்.சி., எச்.எஸ்.சி. மற்றும் பட்டப் படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஜூன் 30-ம் தேதியுடன் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித் தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஜூன் 30-ம் தேதியுடன் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் விண்ணப்பதாரர்கள் தனியார், அரசு, சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகளுக்கு உட்பட்டவராகவும் இருப்பவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தினை சென்னை-4, சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் பெற்று கொள்ளலாம்.
ஏற்கெனவே உதவித் தொகை பெறும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண், உதவித் தொகை கோப்பு எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
0 comments :
Post a Comment