சாப்ட்வேர் இன்ஷ்டலேஷனில் பிரச்சினையா?



நீங்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்கையில் பல தரப்பட்ட சூழ்நிலைகளையும் ,தவறுகளையும் நாம் எதிர்கொள்ளலாம்.இவற்றை ஆங்கிலத்தில் PBDC errors என்று அழைக்கின்றனர்.இதன் முழு விரிவாக்கம் Problem Between Desk and Chair என்பதாகும்.அதாவது நாம் செயல்படத் தொடங்கி அச்செயல் முடிவடையும் முன் அதனை முழுமையடைய விடாமல் ஏற்படும் பிரச்சினைகளே இவை.

சாப்ட்வேர் தொகுப்புகளை அல்லது சிறிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில் நிறைய அறிவிப்புகள் வரும்.வெகு நீளமான டெக்ஸ்ட்டாக இருக்கும் என்பதால் நாம் கட கடவென நெக்ஸ்ட்,நெக்ஸ்ட் என அழுத்தியவாறு விரைவாக இன்ஸ்டால் செய்வோம்.ஆனால் அவை பல்வேறு கண்டிஷன் கூறி பின் இன்ஸ்டால் செய்கிறது என்பதனை உணர மாட்டோம்.அதன் பின்னர் பிரச்சினை ஏற்படுகையில் அதற்கான காரணத்தை அறியாமல் திகைக்கிறோம்.கீழே நல்ல முறையில் இன்ஸ்டால் செய்வதற்க்கான சில டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.



சிஸ்டம் ஒத்துப் போகுமா?உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேடிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர் தொகுப்பின் பரிமாணங்களுடன் இன்ஸ்டால் செய்யவிருக்கும் சாப்ட்வேர் ஒத்துப் போகுமா?என்று அறிந்த பின்னரே இன்ஸ்டால் செய்திட வேண்டும்.இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் சாப்ட்வேர் குறித்து தரப்படும் தகவல்களின் இறுதியாக இவை குறிப்பிட்டிருக்கும் .பிராசசர் என்ன ஸ்பீட் வேண்டும்?எவ்வளவு ஹார்ட் டிஸ்க் தேவைப்படும் ?மெமரி எவ்வளவு வேண்டும்?உங்களிடம் பழைய பெண்டியம் ஐ விண்டோஸ் 98,8 எக்ஸ் டிரைவ் என இருந்தால் நிச்சயம் இன்றைய நாட்களில் வரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்வதில் பிரச்சினை வரத்தான் செய்யும்.

லைசன்ஸ் ஒப்பந்தத்தைச் சற்றாவது படிக்கவும்.சாப்ட்வேர் இன்ஸ்டலேசன் பொது உங்களுக்கும் அந்த சாப்ட்வேர் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நீளமான ஒப்பந்தத்திற்கு "I Accept" என்பதை அழுத்தி நீங்கள் இசைவு தர வேண்டியது இருக்கும்.இந்த நீளமான ஒப்பந்தத்தினை சற்று சில இடங்களிலாவது படிக்க வேண்டும்.அதன் சில ஷரத்துகள் சற்று விவகாரமானவையாக இருக்கலாம்.எடுத்துக்காடாக ரியல் ஒன் ஆடியோ பிளேயரை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் அது உங்களுடைய பெர்சனல் தகவல்களை வாங்கிக் கொண்டு உங்கள் கம்ப்யூட்டரிலேயே அது பயன்படுத்த பதிந்து வைக்கும்.அது மட்டுமின்றி நீங்கள் "I Accept" என்பதனை அழுத்தும் போது உங்களுடைய பெர்சனல் தகவல்கள் அந்த நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளிக்கிறீர்கள்.இதனால் அந்நிறுவனம் மட்டுமின்றி சார்ந்த நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் அறிவிக்கைகள் உங்களுக்குத் தேவையோ இல்லையோ அவை ஸ்பாம் மெய்ல்கள் மாதிரி வந்து கொண்ட இருக்கின்றன.எனவே நீளமான அந்த ஒப்பந்தத்தில் Privacy policy statement என்று இருப்பதையாவது படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.



எங்கு இன்ஸ்டலேசன் ?இன்ச்டலேசனுக்கு முந்தைய விண்டோக்களில் நெக்ஸ்ட் என தொடர்ந்து அழுத்த வேண்டாம்.குறிப்பாக எந்த டிரைவில் இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகிறது என்பதனை உணர்ந்தாக வேண்டும்.பொதுவாக அனைத்து புரோகிராம்களும் சி டிரைவிலையே இன்ஸ்டால் செய்திடும் படி செட் செய்திடப்பட்டிருக்கும் .ஆனால் நீங்கள் முடிவு செய்தால் அதனை வேறு ஒரு டிரைவில் இன்ஸ்டால் செய்திடலாம்.வேறு டிரைவில் இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது.எனவே அந்த கேள்வி உள்ள விண்டோ கிடைக்கையில் அதற்கென சில டிரைவ்களை ஒதுக்கி அந்த டிரவ்களிலே பதியவும்.அப்படி வேறு டிரைவில் பதிந்தாலும் சாப்ட்வேர் ஒன்றின் சில பைல்கள் சி டிரைவில் பதியப்படும் என்பதனை இங்கு நினைவில் கொள்வது நல்லது.

ரீட் மி (Read Me) பைலைப் படிக்கலாமே! எப்போதும் ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன் உங்களுக்கு அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்ததற்காக நன்றி சொல்லிவிட்டு ரீட் மி பைலைத் தரட்டுமா என்று கேட்க்கப்படும்.பெரும்பாலானவர்கள் இதனை தள்ளி விட்டு புதிய சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தச் சொல்வார்கள்.ஏனென்றால் இந்த வகை பைல்களில் சட்ட ரீதியான ஒப்பந்தம் பற்றி மீண்டும் சில குறிப்புகள் இருக்கும் அல்லது தொழில் நுட்ப ரீதியாகத் தகவல்கள் இருக்கும்.ஆனால் சில வேளைகளில் சில சிச்டன்களினால் எப்படி அந்த சாப்ட்வேர் சரியாக வேலை செய்யவில்லை என்று காட்டியிருப்பார்கள் .இதில் உங்கள் சிஸ்டமும் ஒன்றாக இருக்கலாம்.எனவே இதனையும் படித்து அறிந்து கொள்வது நல்லது.









0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes