பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த மாதம் 25-ந்தேதி மரணம் அடைந்தார். அவருக்கு பிரின்ஸ் மைக்கேல், பாரிஸ் ஜாக்சன், பிரின்ஸ் மைக்கேல்-2 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை யார் வளர்ப்பது என்பதில் மைக்கேல் ஜாக்சன் மனைவிக்கும், தாய்க்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனுக்கு 25 வயதில் மகன் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் உமர்பட்டி. நார்வே நாட்டில் இவர் வசித்து வருகிறார்.
இவரது தாய் பெயர் நானிபியா. இவர் 1980-களில் மைக்கேல் ஜாக்சனுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
மைக்கேல்ஜாக்சனின் மனைவி போலவே நானி வாழ்க்கை நடத்தி வந்தார். இதன் காரணமாக 1984-ல் உமர்பட்டி பிறந்தார்.
சில மாதங்களில் மைக்கேல் ஜாக்சனை விட்டு நானி பியா பிரிந்து விட்டார். இதையடுத்து ஜாக்சனது கார் டிரைவரான பாகிஸ்தானைச் சேர்ந்த ரிஸ் என்பவரை நானி பியா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் அமெரிக்காவில் இருந்து நார்வே சென்று குடியேறினார்கள்.
நானி பியா மூலம் தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக நெருங்கிய நண்பர்களிடம் ஜாக்சன் கூறி வந்தார். 2004-ம் ஆண்டு ஒரு பேட்டியிலும் இதுபற்றி ஜாக்சன் சூசகமாக தகவல் வெளியிட்டார்.
மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் நானிபியா, அமெரிக்காவுக்கு விரைந்து சென்றார். அங்கு ஜாக்சனுக்கு நடந்த இறுதிச் சடங்குகளில் முதல் வரிசையில் நானி பியா அமர்ந்திருந்தார். ஜாக்சன் குடும்பத்தினர் அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் மகன் என்பதை நிரூபிக்கும் முயற்சிகளில் நானிபியா ஈடுபட்டுள்ளார். டி.என்.ஏ. சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவும் அவர் முன் வந்துள்ளார்
0 comments :
Post a Comment