தினந்தோறும் இமெயில்களை அனுப்பும் நாம் அடிக்கடி இந்த தவறினை செய்திருக்கிறோம்.ஒருவருக்கு எழுதிய கடிதத்தினை தவறாக மற்றொரு நபருக்கு அனுப்பியிருக்கிறோம்.கோபமாக எழுதிய கடிதத்தினை சரியான நபருக்கு அனுப்பி விட்டு பின் மனம் வருந்தியிருக்கிறோம்.
இதற்குக் காரணம் இமெயில் மெசேஜ் எழுவது மிக எளிது.பேப்பரோ ,பேனாவோ வையில்லை.சிஸ்டத்தில் அமைத்துவிடலாம்.மேலும் அனுப்ப முகவரி எழுத தேவையில்லை.கவர தேவையில்லை.ஸ்டாம்ப் தேவையில்லை.போஸ்ட் பாக்ஸ் இருக்குமிடம் அல்லது கூரியர் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.ஏன் எல்லாருக்கும் தெரிந்த இந்த தகவல்களை அடுக்குகிறேன் என்றால் இந்தக் காலத்தில் நாம் மனதை மாற்றி கொண்டால் அந்தக் கடிதத்தை எந்நேரமும் நிறுத்தி விடலாம்.ஆனால் இ மெயில் கிளையன்ட் புரோகிராம்கள் எல்லாம் அப்படிப்பட்ட கால அவகாசத்தினை தராது.சென்ட் பட்டனை அழுத்திய சில நொடிகளில் உங்கள் கடிதம் சம்பந்தப்பட்டவரின் மெயில் பாக்ஸை அடைத்து விடும்.
ஏன் ,இந்த புரோகிராம்களும் சற்று காக்க வைத்து பின் அனுப்பினால் என்ன?என்ற எண்ணம் தோன்றுகிறதா?தாராளமாக செய்திடலாம்.அதற்க்கான செட்டிங்க்ஸ் மட்டும் செட் செய்திட வேண்டும் .அவுட்லுக் எக்ஸ்ப்ரச்சில் இதனை மேற்கொள்ளும் வழியினைப் பார்க்கலாம்.
1. Tools மெனுவில் Options செலக்ட் செய்திடவும்.
2. அடுத்து Mail Set up டேப்பினை தட்டத் திறக்கவும்.
3. Send/Receive ஆப்ஷனில் அதன் மீது கிளிக் செய்திடவும்.
4. பின் All Accounts செக்சனில் Include this Group in Send/Receive என்பதில் செக் செய்து இருப்பதனை எடுத்துவிடவும்.
5. பின் Close அழுத்தி Ok அழுத்தி வெளியே வரவும்.
அனைத்து அக்கவுன்ட்களையும் சென்ட்/ரிசீவ் ஆப்ஷனிலிருந்து எடுத்து விட்டிருப்பதால் ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பும் போதும் ,பெற முயற்சிக்கையிலும் சென்ட்/ரிசீவ் பட்டனை அழுத்த வேண்டும்.இவ்வாறு நீங்கள் எழுதும் ஒவ்வொரு கடிதமும் உங்கள் முயற்சியில் தான் செல்லும் ..
0 comments :
Post a Comment